முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்: தமிழ்நாடு அரசு

 
Mask-fine-in-tamilnadu

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

பொங்கல் பண்டிகைக் காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அபராதத் தொகையினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிபவர்கள் வாய் மற்றும் மூக்கை நன்கு மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனாவை தடுக்க பொது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web