கட்சி பொறுப்பில் இருந்து விலகிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..! என்ன காரணம்?

 
PTR

திமுக கட்சி பொறுப்பிலிருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விலகியுள்ளதாக சற்றுமுன் ஒரு செய்தி ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவின் தகவல் தொழில்நுட்ப தொடங்கப்பட்டதிலிருந்து செயலாளராக பணிபுரிந்து வந்த பழனிவேல் தியாகராஜன், தற்போது அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வேலைப்பளு காரணமாக திமுகவின் ஐடி விங்க் பொறுப்பிலிருந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விலகி உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில் பழனிவேல் தியாகராஜன் இடமிருந்த பொறுப்பை டிஆர்பி ராஜாவிடம் கூடுதல் பொறுப்பாக திமுக தலைமை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார்குடி எம்எல்ஏவான இவர், ஏற்கனவே திமுக அயலக அணி மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web