விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - பேரிடர் மேலாண்மை ஆணையம்

 
Flood

விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. அன்றில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்காலில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கையையொட்டி பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெய்து வரும் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web