மீண்டும் விலை உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர்..! அதிர்ச்சியில் மக்கள்!!

 
Gas

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.915 க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் சிலிண்டர் விலை ரூ .915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் அக்.1 ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.915 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web