விடியா திமுக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை - எடப்பாடி பழனிசாமி

 
EPS

திமுக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கும் கரும்புடன் 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், திமுக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு  சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

From around the web