2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

 
PMK

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி  அமைக்கப்படும்  என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில்  சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 2021-க்கு விடை கொடுப்போம் 2022-ஐ வரவேற்போம் என்பதை மையமாகக் கொண்டு இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழுவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என்றார். .பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும் என்றும் நகர்புற பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பாமக தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக பாமக பொதுக்குழுவில் நீட் தேர்வுக்கு  விலக்கு அளிக்க வேண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவம் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

From around the web