கரை வேட்டியை கிழித்து சிகிச்சையளித்த டாக்டர் எம்.எல்.ஏ! வைரல் வீடியோ!!

 
Villupuram

விபத்தில் சிக்கிய நபருக்கு டாக்டர் எம்எல்ஏ லட்சுமணன், கட்சி கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப்போட்டு முதலுதவி செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் மனுக்களைப் பெற காரில் புறப்பட்டுச் கொண்டிருந்தார்.

அப்போது ராகவன்பேட்டை அருகே பைக்கில் வந்த ஜெயகுமார் (24) என்ற இளைஞர் விபத்தில் சிக்கி இடது கால் எலும்பு முறிவுடன் சாலையோரம் கிடந்தார். அதைக் கண்ட எம்.எல்.ஏ லட்சுமணன் , விபத்தில் சிக்கிய ஜெயகுமாருக்கு முதலுதவி அளிக்கத் தொடங்கினார் .

காலில் கட்டுப்போடத் துணிகள் இல்லாததால் , காரில் இருந்த திமுக கரை வேட்டியைக் கிழித்துக் கட்டுப் போட்டு , சிகிச்சை அளித்தார் . இதற்கிடையே அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயகுமாரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன், பதவிக்கு வரும்முன்பு விழுப்புரத்தில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

From around the web