பாஜக தான் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றியதா? அண்ணாமலைக்கு சவால் விடுக்கும் கார்த்திகேய சிவசேனாபதி!!

 
பாஜக தான் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றியதா? அண்ணாமலைக்கு சவால் விடுக்கும் கார்த்திகேய சிவசேனாபதி!!

பாஜக துணைத்தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார் கார்த்திகேய சிவசேனாபதி. நாட்டு மாடுகள் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், 2021 சட்டமன்றத் தேர்தல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர் பேட்டிகள் அளித்து வரும் கார்த்திகேய சிவசேனாபதி ஜல்லிக்கட்டுக்கு பாஜக தான் சட்டம் இயற்றியதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை அல்லது வேறு யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என்று சவால் விடுத்துள்ளார்

“பாரதிய ஜனதா கட்சியும், RSS உம் எதோ ஜல்லிக்கட்டிற்குப் பெரிதாகச் செய்தது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்று, கார்த்திகேய சிவசேனாபதி ஜல்லிக்கட்டிற்காக மாடுகளுக்காக வேலை செய்துவிட்டு இப்போது பா.ஜ.க வைஎதிர்க்கிறார் என்று கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாருங்கள், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கட்டும், துணைத் தலைவர் திரு. அண்ணாமலை வேண்டுமானாலும் இருக்கட்டும். யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். பாரதிய ஜனதா கட்சி ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தது என்றும்,மேலும் PETA போன்ற அமைப்புக்கும் உங்களும் என்ன தொடர்பு என்றும் உண்மைகளை தரவுகளுடன் விவாதிக்கலாம்.

பாரதிய ஜனதா கட்சி தான் ஜல்லிக்கட்டிற்குச் சட்டம் இயற்றியதா ? அல்லது தமிழக மாணவர்கள் இளைஞர்கள் போராடி ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்தார்களா ?என நேரலையில் தொலைக்காட்சியில் விவாதிக்கலாம். வாருங்கள் திரு. அண்ணாமலை,முன்னாள் காவல் துறை அதிகாரி அவர்களே !!," என்று கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக கார்த்திகேயே சிவசேனாபதி உருவாகி உள்ளதாகத் தெரிகிறது.

A1TamilNews

From around the web