தளர்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய  வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக அரசு!

தமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தங்கும் விடுதிக்கு வருபவர்களின் உடைமைகள் உரிய முறையில் சுத்தம் செய்ய வேண்டும். உணவகங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உணவகங்கள், கிளப் செயல்பட அனுமதி கிடையாது. வெப்பநிலையை பரிசோதிக்கப்பட்ட பிறகே வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகளை பணியமர்த்த தடை நீடிக்கும். ஒரே நேரத்தில் 50பேர்
 

தளர்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய  வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக அரசு!தமிழகத்தில் ஊரடங்கில்  நாளை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தங்கும் விடுதிக்கு வருபவர்களின் உடைமைகள் உரிய முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

உணவகங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உணவகங்கள்,  கிளப் செயல்பட அனுமதி கிடையாது.
வெப்பநிலையை பரிசோதிக்கப்பட்ட  பிறகே வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.

வயதானவர்கள், கர்ப்பிணிகளை பணியமர்த்த தடை நீடிக்கும்.
ஒரே நேரத்தில் 50பேர்  மட்டும் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவர்.
பொது இடங்களில் எச்சில் துப்ப விதிக்கப்பட்ட  தடை நீடிக்கும்.

பூங்காவில்  உள்ள கழிவறைகள் தினமும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
பூங்காவிற்குள் உணவுகள் விற்பனை செய்யத் தடை.
நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ஷாப்பிங் மால்களில்  ஊழியர்கள் அனைவரும்  மாஸ்க் அணிவது கட்டாயம். அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்,
வரும் வாடிக்கையாளர்கள் இடையே சமூக இடைவெளியை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com