கடைக்குள் சிகரெட் பிடிக்காதீங்க... பேக்கரியை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்; பதபதைக்கும் சிசிடிவி காட்சி

 
Sivagangai-bakkery

சிவகங்கையில் சிகரெட் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இளைஞர்கள் சிலர் பேக்கரியை அடித்து நெறுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் நீதிமன்றம் எதிரே செயல்பட்டு வரும் பேக்கரியில் கேக் வாங்க நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, சிலர் கடைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். அப்போது கடையில் இருந்த சதீஷ் என்பவர் கடைக்குள் சிகரெட் குடிக்க கூடாது என்றும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் மேலும் அங்கு உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். இதனை சதீஷ் மீண்டும் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கேக் வெட்டும் கத்தியை கொண்டும் மற்ற பொருட்களை கொண்டும் சதீஷை அடித்து தாக்கினார்.


இதில் சதீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேக்கரி அடித்து நொறுக்கிய இளைஞர்களை சிசிடிவி காட்சி முலம் தேடி வருகின்றனர்.

From around the web