‘மத்திய சதுக்கம்’ கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

 
CMStalin-visit-kathipara

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சென்ட்ரல் பகுதியில் தடையற்ற போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக ‘மத்திய சதுக்கம்’ அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி வாகன நிறுத்தம், பாதசாரிகளுக்கு முறையான நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பகுதி உருவாக்கப்படுகிறது. 389 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 தளங்களை கொண்ட இந்த திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இதன் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது கட்டுமான திட்டம் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கிண்டிக்கு வருகை தந்த முதல்வர், ‘கத்திப்பாரா சதுக்கம்’ கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

CMStalin-visits-kathipara-junction

கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் ரூ.14 கோடி செலவில் வணிக வளாகம், பேருந்து நிறுத்தம் மற்றும் பூங்கா உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகிறது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் வசதிக்காக இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை அனைத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

From around the web