முதல்வர் பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

 
முதல்வர் பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியின் ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனிப் பெரும்பாண்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவின் ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

புதிய அரசு பதவி ஏற்கும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 15 வது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web