குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
CM-Stalin

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா மேல் நிலைப்பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது.

சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

From around the web