பென்னிகுயிக் -க்கு புதிய சிலை நிறுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எங்கே தெரியுமா?

 
பென்னிகுயிக்

தென் தமிழ்நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை சொந்தப் பணத்தில் கட்டி முடித்த கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவருடைய சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கிம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து லண்டன் வாழ் தமிழர்களின் முயற்சியால் சிலை நிறுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கிம்பர்ளி நகரின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் பென்னிகுயிக்கின் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் நிலையைப் பொறுத்து, சிலை திறப்பிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து செல்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web