கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ்... தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
CM-Stalin-started-a-special-ambulance

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிரப்பு ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

From around the web