தமிழ்நாட்டில் ‘பொங்கல் தொகுப்பு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

 
CM-stalin-innagurates-pongal-gift-scheme

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக  கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்பு தொகுத்து வழங்கப்பட உள்ளன.

பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள பொருட்கள்:

பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராச்சை 50 கிராம், பாசிப்பருப்பு 1/2 கிலோ, நெய் 100 கிராம், ஏலக்காய் 10 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம், கடலைப்பருப்பு 1/4 கிலோ, மிளகு 50 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், புளி 200 கிராம், உப்பு 1/2 கிலோ, கோதுமைமாவு 1 கிலோ, மல்லுத்துள் 100 கிராம், ரவை 1 கிலோ, உளுத்தம்பருப்பு 1/2 கிலோ, கைப்பை ஒன்று, முழு கரும்பு ஆகியவை பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

From around the web