ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து என்ன?

 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து என்ன?

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாமா என்ற கேள்வியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது.

இதில் பேசிய திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி, “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது *மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,”ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை, மாநில அரசின் அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரக்கூடாது என்றும்  முத்தரசன் கூறியுள்ளார்.

இது பொதுமக்களின் உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

அனைத்துக் கட்சிகளின் சார்பில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

From around the web