பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்... தெறித்து ஓடிய எடப்பாடி... இதெல்லாம் ஒரு கேள்வியா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

 
EPS

பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தை குறித்து கேட்டதும் பதில் சொல்லாம நடையை கட்டிய எடப்பாடியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக அப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சி அளிக்கின்றன.

தொடக்கத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு பேசவேண்டாம் என பலரும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். கமல்ஹாசன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலரும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசினர். அதற்கெல்லாம் ஒருபடி மேல்சென்றார் சுப்பிரமணியசாமி. இதெல்லாம் என்ன அரசியல் என்பது தெரியும் என பலரும் சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிராக பொங்கினர்.

பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு கொடுமை நடத்தப்பட்டும் புகார் அளித்தும் பள்ளிநிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டப்போது இவர்கள் எல்லாம் பதில் கூறவில்லை எனவும் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

தற்போது அந்த வரிசையில் சிக்கியுள்ளார் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அதிமுக தரப்பிலோ எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ இதுவரை வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர், பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து கேள்வியெழுப்பினார்.
 
அதற்குப் பதில் எதுவும் கூறாமல் ஈபிஎஸ் மௌனமாக நடையைக் கட்டினார். ஆனால் முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களைப் பார்த்து, இதெல்லாம் ஒரு கேள்வியா?" என்று கோபத்துடன் கேட்டுவிட்டு அங்கிருந்து விடைபெறுகிறார். இதுதொடர்பாக எடப்பாடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், ஒருவேளை எடப்பாடியே மீண்டும் முதல்வர் ஆகியிருந்தால் பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் இந்த பிரச்னையை ஊதி தள்ளிருக்கும், அனைத்து பிரச்சினைகளும் மூடி மறைக்கபப்ட்டிருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த கொடுமை குறித்து கேட்காமல் இதெல்லாம் ஒரு கேள்வியான முன்னாள் அமைச்சரான ஒரு பெண் ஒருவரே கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web