12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் ! தேர்வுத்துறை அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேதியியல் தேர்வில் கூடுதல் போனசாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வேதியியல் வினாத்தாளில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. மாணவர்கள் குறிப்பிட்ட
 

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் ! தேர்வுத்துறை அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேதியியல் தேர்வில் கூடுதல் போனசாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

வேதியியல் வினாத்தாளில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வியை அட்டெண்ட் செய்திருந்தாலே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

A1TamilNews.com

From around the web