கரூரில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்... குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ்!!

 
BJP-protests-in-karur

கரூரில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜவினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர்.

பஞ்சாபில் பிரதமர் மோடி ரூ. 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்க சமீபத்தில் சென்ற போது, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி சாலை வழியாக செல்ல முடியாமல் திரும்பிச் சென்றார்.

இதைக் கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் திண்ணப்பா தியேட்டர் எதிர்பறம் பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 100-க்கும் அதிகமான பாஜகவினர் அந்த பகுதியில் திரண்டனர்.

அப்போது அந்தப்  பகுதிக்கு வந்த போலீசார் திண்ணப்பா தியேட்டர் அருகில் ஆர்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை, போராட்டம் நடத்த கூடாது என தெரிவித்தனர். இருப்பினும் போலீசாரின், தடையை மீறி, மாவட்ட தலைவர் தலைமையில் 100-க்கும் அதிகமான பாஜகவினர் பஞ்சாப் அரசையும்,  காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் முழக்கம் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்த சமயம் அங்கிருந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

From around the web