வழிப்பறி செய்கிறீர்களா..? போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்.!

 
Vepery

சென்னையில் முககவசத்தை முறையாக அணிந்து செல்லுங்கள் என அறிவுரை கூறிய காவலருடன், வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரி பகுதியில் உள்ள ஈ.வி.கே சம்பத் சாலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்திய போலீசார், முககவசத்தை முறையாக அணிந்து செல்லுங்கள் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது அந்த நபர் முககவசம் அணிந்து வரும் தன்னை தடுத்து நிறுத்தி வழிப்பறி செய்கீறிர்களா..? ஊரடங்கில் 10 காசு சம்பாதிக்க நாய்போல் அலைகிறோம் நாங்கள், ஆனால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எங்களிடம் வழிப்பறி செய்கிறீர்கள் என்றவாறு கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

காவல்துறையினர் தொடர்ந்து முககவசத்தை முறையாக அணிந்து செல்லுமாறு சொல்ல தான் வாகனத்தை தடுத்து நிறுத்தினோம், அபராதம் விதிக்க நிறுத்தவில்லை என எடுத்துறைத்தும் அந்த நபர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து குதர்க்கமாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த நபரின் கூச்சல் சத்தத்தினார் அந்த இடத்தில் பொதுமக்கள் கூட தொடங்கினர், அதன்பின்னர் காவல்துறையினர் அந்த நபரிடம் பெயர் முகவரியை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web