தமிழ்நாட்டில் நாளை மற்றும் 9-ம் தேதி விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 
Anna University

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9-ம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 14,573 வாக்குச்சாவடிகளில், முதற்கட்டமாக 7,921 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9-ம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

From around the web