அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

 
TN Election

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக். 9-ல் மற்ற 28 மாவட்டங்களில் தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web