சென்னையில் வரும் 7-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு

 
சென்னையில் வரும் 7-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 7-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதில் அதிமுக - 65 இடங்களையும், பாமக - 5 இடங்களையும், பாஜக - 4 இடங்களையும் இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இதனால், தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சட்ட்மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web