வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி!! முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக!

 
வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி!! முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக!

கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் அதிமுக எதிர்பார்த்ததை விட பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

148 இடங்களில் இதுவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 85 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் வால்பாறை தனித் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், 19 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இத்தொகுதியில் மொத்தமே 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வாக்காளர்கள் பெற்ற வாக்கு விவரம்

டி.கே.அமுல்கந்தசாமி (அதிமுக) - 66,474
ஆறுமுகம் (சிபிஐ) - 53,309

From around the web