முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 6 அறிவிப்புகள் !!

 
CM-Stalin

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் திமுகவினர் ஊரடங்கில் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்துடன் 2-து தவணையாக நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் , 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.

  • தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று கட்டப்படும் .
  • தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்றும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூவரை தேர்வு செய்து விருது வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
  • மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.
  • ஞானபீடம், சாகித்ய அகடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் ,புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருது பெற்றவர்களை வைக்கும் கௌரவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் .
  • திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் குளங்கள் அமைத்து தரப்படும்.
  • திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.

From around the web