திமுக ஆட்சியில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீண்! நடிகை குஷ்புவின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வாரா அமைச்சர் மா.சுப்பிரமணியன்?

 
kushboo

மே மாதம் 7ம் தேதி பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து துரிதமான நடவடிக்கைகள் எடுத்தது மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் விவரங்களை ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் , கிடைக்கப்பெற்ற தடுப்பூசி எண்ணிக்கைகளை விடவும் கூடுதலாக செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அது எப்படி சாத்தியம் என்று செய்தியாளார்கள் கேட்ட போது ஒவ்வொரு தடுப்பூசி குப்பியிலும் 16 சதவீதம் வரையிலும் கூடுதல் மருந்து இருக்கும், இது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் படி உலகம் முழுவதும் உள்ள நடைமுறையாகும்.

தமிழ்நாட்டு மருத்துவர்கள், செவிலியிர்கள் இந்த 16 சதவீதம் கூடுதல் மருந்தையும் திறம்பட பயன்படுத்தியதால்  தடுப்பூசி தரப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக செலுத்த முடிந்தது. ஒவ்வொருவருக்கும் சரியான அளவுக்கும் மருந்து செலுத்தப்பட்டது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றின் நிகழ்சியில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு ஜூன் மாதம் மட்டுமே, போதிய அளவில் மக்கள் வராததால் தமிழ்நாட்டில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவியலியர்கள் திறம்பட செயல்பட்டதால் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிலையில் நடிகை குஷ்புவின் இந்தக்க் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

தடுப்பூசி இல்லாமல் முகாம்கள் மூடப்பட்டும், மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதும் உள்ள நிலையில் மத்திய அரசிடம் 1 கோடி தடுப்பூசிகள் கூடுதலாக தர வேண்டும்  என்று கோரிக்கை வைத்துள்ள நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளார் நடிகை குஷ்புவின் கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


 

From around the web