திருச்சி அருகே 4 வயது மகன் கண்முன்னே அருள்வாக்கு பூசாரி வெட்டி படுகொலை

 
Trichy-Priest-murdered-in-front-of-son

திருச்சி அருகே 4 வயது மகன் கண்முன்னே அருள்வாக்கு பூசாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே சிங்கிவயலைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் அருள் வாக்கு கூறி வந்துள்ளார்.

இன்று காலை தனது 4 வயது மகன் பாலமுருகன் கருப்பையாவுடன் கிணற்றில் குளிக்க சென்ற நிலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆதினமிளகி என்பவர் வெட்டி உள்ளார்.

நெஞ்சில் வெட்டுபட்ட நிலையில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து சுமார் 150 மீட்டர் தூரம் நெஞ்சை பிடித்த படி வீட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். பாலமுருகன் கருப்பையா இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்து சொல்லியுள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் செல்வதற்குள் பாதி வழியில் சுருண்டு விழுந்த பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்.

From around the web