சரவணா ஸ்டோரில் 30... போத்தீஸ்ல 13.. குரோம்பேட்டையை கதிகலங்க வைத்த கொரோனா..!

 
Chromepet-pothys-staff-affected-corona

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

நகைக் கடை, துணிக் கடை, வணிக வளாகங்கள், தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கடை மூடப்பட்டுள்ளது.

இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் சுவர்ணமகால் எனும் நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தக் கடையில் பணியாற்றிய 240 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலால் போத்தீஸ் கடையின் குரோம்பேட்டை கிளை மூடப்பட்டது. இது போல் அடுத்தடுத்து பெரிய கடைகளில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது அங்கு பொருட்களை வாங்க சென்றிருந்த வாடிக்கையாளர்களை அதிர வைத்தது.

From around the web