2022-ல் 23 நாள்கள் அரசு பொது விடுமுறை.. பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

 
Secretariat Secretariat

2022-ம் ஆண்டிற்கான பொது விடுமுறைகளின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையை வெளியிடும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டிருக்கும் பொது விடுமுறைகளின் பட்டியலில் மொத்தமாக 23 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 22 நாள்கள் அனைவருக்கும் பொருந்தும். 1 நாள் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு மட்டும் பொருந்தும் விடுமுறையாக வழங்கப்படுகிறது.

இதில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilnadu-lgovernment-holidays

From around the web