வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி... பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 
Thoothukudi

சிறுமி கர்ப்பமான வழக்கில் அவரது தந்தையும், காதலனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சிசிக்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், காரணம் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியில் நின்ற தாய் பின்னர் தனது மகளிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். சிறுமி மேற்கொண்டு கூறிய தகவல் அவருக்கு பேரிடியாக இருந்தது. சிறுமியின் தந்தையான முனியசாமி (வயது 39) பெற்ற மகள் என்றும் பாராமல் சீரழித்து வந்துள்ளார். அம்மாவிடம் எதுவும் சொல்லக்கூடாது எனக் மிரட்டியுள்ளார்.

மேலும் சிறுமியை காதலிப்பதாக கூறி வந்த அறிவுமதி (வயது 19) என்ற இளைஞரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமியின் தாய் போலீசில் அளித்த புகாரின் பேரில் முனியசாமி, அறிவுமதி இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

From around the web