தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் பட்டியல் வெளியீடு.. 100 சதவீதம் தேர்ச்சி..!

 
Anbil-Mahesh

சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவ - மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், 11-ம் வகுப்பு தேர்வில் 20 சதவீதம், 12-ம் வகுப்பு மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் தேர்வுத் துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன.

மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, இன்று காலை 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது முடிவுகளை அறியலாம். மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் 22-ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது,

22-ம் தேதி முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என கூறினார்.

From around the web