நல்லாட்சியில் தமிழகத்திற்கு முதலிடம்!

நாட்டில் நல்லாட்சி வழங்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. விவசாயம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம், பொருளாதார நிர்வாகம் உள்ளிட்ட 10 துறைகளின் அடிப்படையில் நல்லாட்சி தரப்படும் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 18 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 5.62 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஜார்க்கண்ட் கடைசி இடத்திலும், உத்தரப்
 

நல்லாட்சியில் தமிழகத்திற்கு முதலிடம்!நாட்டில் நல்லாட்சி வழங்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

விவசாயம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம், பொருளாதார நிர்வாகம் உள்ளிட்ட 10 துறைகளின் அடிப்படையில் நல்லாட்சி தரப்படும் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 18 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 5.62 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ஜார்க்கண்ட் கடைசி இடத்திலும், உத்தரப் பிரரேசம்‌17வது இடத்திலும் இருக்கின்றன. நல்லாட்சியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பிரிவுகளில் பின்தங்கியே இருக்கிறது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையில் தமிழகத்திற்கு ஒன்பதாவது இடமே கிடைத்துள்ளது.

தொழில்துறையில் 14வது இடத்திலும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்திலும் தமிழகம் உள்ளது. பொது சுகாதாரத்துறையில் இரண்டாவது இடத்திலும், மக்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்துகொடுப்பதில் முதலிடத்திலும் தமிழகம் உள்ளது.

பொருளாதார நிர்வாகத்தில் தமிழகத்திற்கு 5வது இடமும், சமூகநலத்துறையில் 7வது இடமும் சுற்றுச்சூழலில் 3ஆவது இடமும் கிடைத்துள்ளது. நீதி மற்றும் சட்டம் ஒழுங்கில் தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட தரவரிசை ஒருங்கிணைக்கப்பட்டு 18 பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதே போல் 7 யூனியன் பிரதேசங்கள் தரவரிசை படுத்தப்பட்டதில் புதுச்சேரி முதலிடத்தை பெற்றுள்ளது. சண்டிகர் இரண்டாம் இடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

https://www.A1TamilNews.com

 

 

From around the web