‘ரஜினிகாந்துடன் கமல் ஹாஸனை ஒப்பிடுவது மிகப் பெரிய தவறு’! – தமிழருவி மணியன் நெத்தியடி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அடுத்த நாளே, கமல் ஹாஸன் அரசியல் கட்சி தொடங்கும் தனது திட்டத்தை அறிவித்தார். ரஜினியை முந்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அவசர அவசரமாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை, பதிவு கூடச் செய்யாமல் அறிவித்தார். அந்தக் கட்சிக்கு மாவட்டம்தோறும் முறைப்படி நிர்வாகிகளைக் கூட அவர் இதுவரை நியமிக்கவில்லை. ஆனால்
 

‘ரஜினிகாந்துடன் கமல் ஹாஸனை ஒப்பிடுவது மிகப் பெரிய தவறு’! – தமிழருவி மணியன் நெத்தியடி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அடுத்த நாளே, கமல் ஹாஸன் அரசியல் கட்சி தொடங்கும் தனது திட்டத்தை அறிவித்தார். ரஜினியை முந்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அவசர அவசரமாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை, பதிவு கூடச் செய்யாமல் அறிவித்தார். அந்தக் கட்சிக்கு மாவட்டம்தோறும் முறைப்படி நிர்வாகிகளைக் கூட அவர் இதுவரை நியமிக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அவசரகதியில் நிகழ்த்தாமல், அடிமட்டத்திலிருந்து வலுவான கட்சிக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்துக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் நிர்வாகிகளை தமிழகம் முழுக்க அமைக்கும் வேலை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. பெரும் கட்சிகளாலேயே சாத்தியப்படுத்த முடியாத விஷயத்தை ரஜினி கட்சி அறிவிக்கும் முன்பே செய்து முடிக்கும் நிலையில் உள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து ரஜினியை கமல் ஹாஸனுடன் மீடியாக்கள் ஒப்பிடுவது தொடர்கிறது.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், “ரஜினிகாந்துடன் கமல் ஹாஸனை ஒப்பிடுவது மிகப் பெரிய தவறு; ஏற்க முடியாதது.

கமல் ஹாஸன் கட்சி அறிவித்துவிட்டாரே தவிர, இதுவரை முறைப்படி ஒரு மாவட்டத்துக்குக் கூட நிர்வாகிகளை நியமிக்கவில்லை. கட்சியை அறிவித்துவிட்டு அடித்தளத்தை எப்படி அமைப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ரஜினிகாந்த் அப்படி அல்ல. தமிழகம் முழுவதும் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டு கட்சி தொடங்கக் காத்திருக்கிறார். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் இனி இருவரையும் ஒப்பிடவே மாட்டார்கள்,” என்றார்.

– வணக்கம் இந்தியா

From around the web