தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி ராசிகளுக்கு..

தமிழ் புத்தாண்டு பலன்கள் தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) இராசி அதிபதி குரு இராசியிலேயே வக்ர கதியில் இருக்கிறது.முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். உடல் நலக்குறைவு உண்டாகும். தாயாரின் உடலநலம் பாதிக்கும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். 2, 3மிடத்து அதிபதி சனி இராசியில் இருக்கிறது. ஓரளவுக்கு பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
 

தமிழ் புத்தாண்டு பலன்கள்

தமிழ் புத்தாண்டு  ராசி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீனம்  ராசி  ராசிகளுக்கு..தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இராசி அதிபதி குரு இராசியிலேயே வக்ர கதியில் இருக்கிறது.முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். உடல் நலக்குறைவு உண்டாகும். தாயாரின் உடலநலம் பாதிக்கும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும்.

2, 3மிடத்து அதிபதி சனி இராசியில் இருக்கிறது. ஓரளவுக்கு பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் லாபம் சம்பாதிப்பார்கள்.

5, 12க்குரிய செவ்வாய் 6மிடத்தில் இருப்பதினால், காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் உடல்நலம் பாதிக்கும். 6, 11க்குரிய சுக்கிரன் 3மிடத்தில் இருப்பதினால், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும்.

7, 10க்குரிய புதன் 4மிடத்தில் நீச்சம் பெறுவதினால்கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். பதவி பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதாமகும். தொழில் மந்த நிலையில் நடைபெறும். 9மிடத்து அதிபதி சூரியன் 5மிடத்தில் உச்சம் பெறுவதினால், அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சிகள் வெற்றியைத் தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கி வர நன்மைகள் கிடைக்கும். ஆலங்குடி சென்று வர ஆசைகள் நிறைவேறும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இராசி அதிபதி 12மிடத்தில் இருப்பதினால், குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். குழப்பமான சூழ்நிலையும் காணப்படும். பணத்தை முதலீடுகள் செய்ய நேரிடும். இடமாற்றம் உண்டாகும். உடல் நலக்குறைவு உண்டாகும். 3,12க்குரிய குரு 12மிடத்தில் வக்ர கதியில் இருப்பதினால், பிரயாணங்கள் நன்மையைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் நஷ்டத்தை அடைவர்.

4, 11க்குரிய செவ்வாய் 5மிடத்தில் இருப்பதினால், கல்வியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும்.

5, 10க்குரிய சுக்கிரன் 2மிடத்தில் இருப்பதினால், வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புது தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். அந்தஸ்து உயரும்.

6,9க்குரிய புதன் 3மிடத்தில் நீச்சம் பெறுவதினால், அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்விக்கடன் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். 8மிடத்து அதிபதி சூரியன் 4மிடத்தில் உச்சம் பெறுவதினால், தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த்தொழில் நஷ்டமடைய வாய்ப்புண்டு. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வர கவலைகள் தீரும்.

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

இராசிக்குரிய சனி 11மிடத்த்தில் இருப்பதினால், முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 2, 11க்குரிய குரு வக்ர கதியில் இருப்பதினால், குடும்பத்தில் சில குழப்பங்கள் நிலவும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நடைபெற இருந்த சுப காரியங்கள் தள்ளிப் போகும். உறவினர்கள் பகைவர்களாக மாறுவார்கள்.

3, 10க்குரிய செவ்வாய் 4மிடத்தில் இருப்பதினால், உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், விளம்பரம், தரகர், எழுத்துத் தொழில்கள் லாபகரமாக நடைபெறும்.

4, 9க்குரிய சுக்கிரன் இராசியில் இருப்பதினால், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். தாய், தந்தையர் உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.

5, 8க்குரிய புதன் 2மிடத்தில் நீச்சம் பெறுவதினால், சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரங்கள் சில பிரச்சினைகளுக்கிடையே மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். 7மிடத்து அதிபதி சூரியன் 3மிடத்தில் உச்சம் பெறுவதினால், இடமாற்றம் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வர சங்கடங்கள் தீரும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இராசி அதிபதி குரு 10மிடத்தில் வக்ர கதியில் இருப்பதினால், உத்தியோகத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவி பறி போகும். சிறு உடல் நலக்குறைவு உண்டாகும். முயற்சிகளில் மிகுந்த சிரமத்தின் பேரில் வெற்றி கிடைக்கும்.

2, 9க்குரிய செவ்வாய் 3மிடத்தில் இருப்பதினால், அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

3, 8க்குரிய சுக்கிரன் 12மிடத்தில் இருப்பதினால், இன்சூரன்ஸ் , பி.எப் போன்றவைகள் தாமதமாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 4, 7க்குரிய புதன் இராசியில் நீச்சம் பெற்று உள்ளதினால், வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் பாதிக்கப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும்.

கணவன் மனைவி ஒற்றுமை குறையும். கல்வியில் பின் தங்கிய நிலை காணப்படும்.
6க்குரிய சூரியன் 2மிடத்தில் உச்சம் பெறுவதினால் கடன்கள் வாங்குவதை தவிர்க்க முடியாது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 11, 12க்குரிய சனி 10மிடத்தில் இருப்பதினால் நண்பர்களினால் நன்மைகள் கிடைக்கும். முதலீடுகள் சில லாபத்தைத் தரும். அயல்நாடுகளிலிருந்து நன்மைகள் கிடைக்கும்.

பரிகாரம்: புனித நதிகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பிரச்சினைகள் விலகி ஓடும்.

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…

 சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு… 

 
 
– வணக்கம் இந்தியா
 

From around the web