தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகும்! முதல்வர் எடப்பாடி நம்பிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கொரோனா பரவலைப் பொறுத்தவரை இதுவரை நிலைமை கட்டுக்குள் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அரசின் வழிமுறைகளை சரியாக செயல்படுத்தியதால் சேலம் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 13000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த
 

தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகும்! முதல்வர் எடப்பாடி  நம்பிக்கை!மிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கொரோனா பரவலைப் பொறுத்தவரை இதுவரை நிலைமை கட்டுக்குள் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் வழிமுறைகளை சரியாக செயல்படுத்தியதால் சேலம் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 13000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறு, குறு ஆலைகள், செயல்பட ஆரம்பித்துள்ளன.

பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவும், சலூன்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் .

அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து பின்பற்றினாலே விரைவில் தமிழகம் கொரோனாவிலிருந்து விடுபடும் என எடப்பாடி அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web