முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் ஓபிஎஸ்… ஆளுநர் துரோகம் செய்துவிட்டார்! – சு சுவாமி

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆளுநர் சட்டத்துக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும், சசிகலாவை ஆட்சிஅமைக்க அழைப்பதில் சட்டரீதியாக முடிவெடுக்க மத்திய அரசின் அனுமதியையோ அல்லது வேறு யாருடைய அனுமதியையும் இதில் அவர் பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவித்தார். பிபிசிக்கு அவர்- அளித்துள்ள பேட்டியில், “ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, அப்படி செய்தால் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை, முதல்வராக இருப்பதற்கும்
 

முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் ஓபிஎஸ்… ஆளுநர் துரோகம் செய்துவிட்டார்! – சு சுவாமி

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆளுநர் சட்டத்துக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும், சசிகலாவை ஆட்சிஅமைக்க அழைப்பதில் சட்டரீதியாக முடிவெடுக்க மத்திய அரசின் அனுமதியையோ அல்லது வேறு யாருடைய அனுமதியையும் இதில் அவர் பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பிபிசிக்கு அவர்- அளித்துள்ள பேட்டியில், “ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, அப்படி செய்தால் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை, முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்,” என்றார்.

முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது என்றும், சட்டத்திற்கு அதற்கு அனுமதியில்லை என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

“இப்படி பயப்படும் பன்னீர்செல்வம் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடாது என்று கூறியுள்ள அவர் தமிழகத்தில் உள்ள பா.ஜ.கவும் திராவிட கட்சிகளையும் போலத்தான் செயல்படுவதாக,” சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார்.

பொறுக்கி விவகாரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈடுபட்டவர்களை பொறுக்கி என்று குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சை பற்றி குறிப்பிட்ட சுவாமி, நான் அப்படிச் சொல்லவில்லை என்றும், தேசத் துரோகிகளைத்தான் பொறுக்கி என்று குறிப்பிட்டதாகவும் எல்லா தமிழர்களையும் நான் கூறவில்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி தமிழ்

From around the web