மஹாராஷ்ட்ரா விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை!

மஹாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளது. வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜாராகி வாதாடி வருகிறார்கள். இன்று அல்லது நாளைக்குள் சட்டமன்றத்தில் பாஜக மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். பாஜக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடுகிறார். கவர்னருக்கு உட்பட்ட அதிகாரத்தின் படி தான் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க
 

மஹாராஷ்ட்ரா விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை!ஹாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளது.

வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி  ஆஜாராகி வாதாடி வருகிறார்கள். இன்று அல்லது நாளைக்குள் சட்டமன்றத்தில் பாஜக மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் சார்பில்  மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடுகிறார். கவர்னருக்கு உட்பட்ட அதிகாரத்தின் படி தான் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயிக்க முடியாது என்றும் வாதிட்டுள்ளார்.

நீதிபதி ரமணா  கவர்னர் யாரை வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று கூறியுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.  அரசியல் தலைவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web