ராகுல் காந்தியின் “சௌக்கிதார் சோர்” விவகாரத்தை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சௌக்கிதார் சோர் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாகக் கூறிய ராகுல் காந்தி மீதான வழக்கை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்ற அமர்வு. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் மூன்று முக்கிய தீர்ப்புகள் இன்று வெளியாகிறது. முதலாவதாக ராகுல் காந்தி மீது பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு மீது தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த ராகுல்
 

ராகுல் காந்தியின் “சௌக்கிதார் சோர்” விவகாரத்தை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சௌக்கிதார் சோர் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாகக் கூறிய ராகுல் காந்தி மீதான வழக்கை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்ற அமர்வு.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில்  மூன்று முக்கிய தீர்ப்புகள் இன்று வெளியாகிறது. முதலாவதாக ராகுல் காந்தி மீது பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு மீது தீர்ப்பு வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி, வழக்கை முடித்து வைக்குமாறு  மனு செய்து இருந்தார். இதன் மீதான விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அமர்வு, இனிமேல் ராகுல் காந்தி பொறுப்போடு பேச வேண்டும் என்று அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.

ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை எனவே வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரகோத்கி வாதாடினார்.

https://www.A1TamilNews.com

From around the web