ட்ரம்ப் மகளை சந்தித்த சுந்தர் பிச்சை! 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி..

டல்லாஸ்: அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்கா ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை. 2016 அதிபர் தேர்தலின் போது முறைகேடுகளுக்கு துணை போனதாகவும், சீனா ராணுவத்திற்கு ஒத்துழப்பைபு வழங்கியதாகவும் கூகுள் நிறுவனத்தின் மீது அதிபர் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார். நீதித் துறையும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. கூகுள் நிறுவனத்தின் “தேடுதல் பொறி” யும் களவாடப்பட்டு விட்டது என்றும் அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். ஒரு கட்டத்தில், உலகம் முழுவதும் இடியட்
 

ட்ரம்ப் மகளை சந்தித்த சுந்தர் பிச்சை! 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி..டல்லாஸ்:  அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்கா ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை.

2016 அதிபர் தேர்தலின் போது முறைகேடுகளுக்கு துணை போனதாகவும், சீனா ராணுவத்திற்கு ஒத்துழப்பைபு வழங்கியதாகவும் கூகுள் நிறுவனத்தின் மீது அதிபர் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார். நீதித் துறையும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

கூகுள் நிறுவனத்தின்  “தேடுதல் பொறி” யும் களவாடப்பட்டு விட்டது என்றும் அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். ஒரு கட்டத்தில், உலகம் முழுவதும் இடியட் என்று கூகுளில் தேடினால் அதிபர் ட்ரம்ப் படம் தான் முதலில் வந்து கொண்டிருந்தது. அதை அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், டல்லாஸில் நடைபெற்ற வட்டமேஜை நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்புடன் சுந்தர் பிச்சை கலந்து கொண்டார். 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்கு கூகுள் நிறுவனம் தயாராக உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்தார்.

ட்ரம்ப் மகளை சந்தித்த சுந்தர் பிச்சை! 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி..

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது வரை உள்ளவர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற ட்ரம்பின் முழக்கத்திற்கு வலு சேர்ப்பதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

டெக்னாலஜி வேலைகள் அமெரிக்கர்களுக்கு கிடைப்பதில்லை என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த வேளையில், கூகுள் நிறுவனம் அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

முன்னதாக அதிபர் ட்ரம்பையும் சந்தித்துப் பேசினார் சுந்தர் பிச்சை.  அதுகுறித்து ட்வீட் செய்திருந்த ட்ரம்ப் “கூகுள் நிறுவனத்தின் அதிபரை சந்தித்துப் பேசினேன். கூகுள் அமெரிக்க ராணுவத்திற்கு துணையாக இருக்கும். சீன ராணுவத்திற்கு அல்ல என்று அவர் உறுதி அளித்தார். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியிருந்தார்.

இவாங்கா ட்ரம்ப், அதிபர் ட்ரம்புக்கு ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web