இந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை!

கொரோனாவால் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கபட்டிருந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தது. பொதுவாக இதுவரை ஆன்லைனில் வேலை செய்பவர்கள் பைல்களை வி ட்ரான்ஸ்பர் மூலம் அனுப்பி வந்தனர். இதில் 2 ஜிபி வரை இலவசமாக பைல்களை அனுப்பும் வசதி இருந்தது. பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் 20 ஜிபி வரை பைல்களை அனுப்பி வைத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது வி ட்ரான்ஸ்பர் வலைதளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில்
 

இந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை!கொரோனாவால் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கபட்டிருந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தது.

பொதுவாக இதுவரை ஆன்லைனில் வேலை செய்பவர்கள் பைல்களை வி ட்ரான்ஸ்பர் மூலம் அனுப்பி வந்தனர். இதில் 2 ஜிபி வரை இலவசமாக பைல்களை அனுப்பும் வசதி இருந்தது. பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் 20 ஜிபி வரை பைல்களை அனுப்பி வைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் தற்போது வி ட்ரான்ஸ்பர் வலைதளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணிபுரிந்து வந்த பலருக்கும் பின்னடைவை உருவாக்கியுள்ளது.

இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் பாடுவதற்குத் தேவையான தகவல்களை விட்ரான்ஸ்பர் மூலமே பகிர்ந்து வந்தனர்.இந்த வலைதளம் பேருதவியாகவே இருந்தது. திடீரென தடை செய்யப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web