மனு தர்மத்தின் வர்ணப் பூச்சோடு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை! மு.க.ஸ்டாலின் காட்டம்!!

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக சார்பில் போராட்டங்களை முன்னெடுக்க மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின் கூறியுள்ளதாவது, ”நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது. மருத்துவப் படிப்புகளில் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கப்பட்டதன் மூலம் சமூகநீதி சிதைக்கப்பட்டது. அடுத்து, பழைய மனுதர்மத்தின் ‘வர்ண’ப்பூச்சோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை!ஆளும் அதிமுக இவற்றை எதிர்க்காமல் வாய்மூடி இருந்தாலும், மாநில
 

மனு தர்மத்தின் வர்ணப் பூச்சோடு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை! மு.க.ஸ்டாலின் காட்டம்!!புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக சார்பில் போராட்டங்களை முன்னெடுக்க மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.  இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின் கூறியுள்ளதாவது,

”நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது. மருத்துவப் படிப்புகளில் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கப்பட்டதன் மூலம் சமூகநீதி சிதைக்கப்பட்டது.

அடுத்து, பழைய மனுதர்மத்தின் ‘வர்ண’ப்பூச்சோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை!ஆளும் அதிமுக இவற்றை எதிர்க்காமல் வாய்மூடி இருந்தாலும், மாநில உரிமைகளுக்காகத் தோழமை சக்திகளுடன் இணைந்து திமுக தொடர்ந்து போராடும்!

இடஒதுக்கீடு வழக்கைப் போல, புதிய கல்விக் கொள்கை விவகாரத்திலும் வெற்றி பெறுவோம்!”

முதல் கட்டமாக புதிய கல்விக் கொள்கை 2020 என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி, கல்வியாளர்கள் வசந்தி தேவி, கருணானந்தம், பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் ஆகியோர் பங்கேற்கும் புதிய கல்விக் கொள்கைகள் சாமானிய மக்களுக்கு எப்படி எதிரானது என்பதை விளக்கும் காணொலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதன் நேரடி ஒளிபரப்பு ஞாயிறு காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விரைவில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது.

A1TamilNews.com

 

From around the web