மைதானத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த விராட் கோலி..! வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது விராட் கோலி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் ஒருநாள் தொடரையும் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஃபீல்ட் செய்தபோது விராட் கோலி, ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Koi warm up karna @imVkohli se seekhe. 😉 What new moves will he bring out in today’s match? 🕺 💪
— Star Sports (@StarSportsIndia) March 19, 2023
Tune-in to the 2nd Mastercard #INDvAUS ODI
Today | 12:30 PM onwards | Star Sports Network & Disney+Hotstar#BelieveInBlue #Cricket #RoadToWorldCup pic.twitter.com/E1xe9XYvQL
இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அதிகார ட்விட்டர் பக்கம், இன்று இவர் என்ன ஆட போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளது.