என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம்.. நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

 
Venkatesh Iyer

ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றவெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரகுநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றவர். ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 956 ரன்கள் எடுத்துள்ளார்.

Venkatesh Iyer

2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் இடம் பெற்றார். இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடிய இவர் 133 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் தான் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிய நிலையில், திருமண வாழ்க்கையில் தனது அடுத்த இன்னிங்ஸை விளையாட இருக்கிறார். ஆம், வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web