விசுவாசமான பெங்களூரு ரசிகர்களுக்கு நன்றி.. உருக்கமான ட்வீட்.. பெங்களூரிலிருந்து விலகும் கோலி?

 
Virat Kholi

பெங்களூரு அணியை அனைத்து நிலைகளிலும் ஆதரித்த விசுவாசமான ரசிகர்களுக்கு நன்றி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் முன்னேறி உள்ளன. இதில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோத உள்ளன.

Kholi

சாம்பியன் பட்டம் வெல்ல தகுதி உள்ள அணியாக கருதப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 வது இடத்தை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. பெங்களூரு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில், பெங்களூரு அணியை அனைத்து நிலைகளிலும் ஆதரித்த விசுவாசமான ரசிகர்களுக்கு நன்றி என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

A post shared by Virat Kohli (@virat.kohli)

இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மறக்க முடியாத தருணங்களை கொண்டுள்ள சீசன். இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக நமது இலக்கை நம்மால் அடைய முடியாமல் போனது. அது ஏமாற்றம் தான். இருந்தாலும் நம் தலையை உயர்த்தி பிடிப்போம். ஒவ்வொரு படியிலும் அணியை ஆதரித்த மெய்யான ரசிகர்களுக்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web