தல தோனி ரிட்டன்ஸ்... மலர் தூவி வரவேற்ற ரசிகர்கள்! வைரல் வீடியோ

 
Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியை பூக்கள் தூவி மேல தாளத்துடன் சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தொடங்கப்பட்டபோது அதன் கேப்டனாக தோனி பொறுப்புக்கு வந்தார். அவரை சென்னை அணி ஒவ்வொரு ஏலத்தின் போதும் தக்க வைத்துக் கொண்டது. அந்த வகையில் சிஎஸ்கே உடன் தோனி தனது 15-வது ஆண்டை இந்தாண்டு நிறைவு செய்கிறார்.

Dhoni

இந்த தொடரின் 16-வது சீசனானது மார்ச் 31-ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை வெளியானதில் இருந்தே தற்போது இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த 16-வது சீசனின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த நிலையில், போட்டிக்காக தயாராகும் வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 26 பேர் பல்வேறு விமானங்களில் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லியில் இருந்து பயணிகள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியை பூக்கள் தூவி மேல தாளத்துடன் சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து தனியார் ஓட்டலுக்கு செல்லும் மகேந்திர சிங் தோனி வரும் நாட்களில் சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகள் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடைபெற்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் சிஎஸ்கே விளையாடவுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.

From around the web