ஜாலியாக பைக்கில் ரவுண்டு வரும் தல தோனி.. வைரல் வீடியோ!

 
Dhoni

முன்னாள் கேப்டன் தோனி பைக்கில் ஜாலியாக ரைடு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த தோனி, கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். 

Dhoni

தோனிக்கு பைக்குகள் மீது இருக்கும் ஆர்வத்தைப் பற்றி நாம் தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் அவருடை பைக்குகள் மீதான ஆர்வத்தைப் பற்றி அறிவார்கள். பெரும்பாலான பிரபலங்களுக்கு கார்கள் மீது தான் தனிப் பிரியம் இருக்கும். தோனிக்கும் கார்கள் மீது பிரியம் இருந்தாலும், அதனைக் கடந்து பைக்குகள் மீது தீராத ஆர்வம் உண்டு.

ஒருமுறை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூட தோனியின் ஒரு பண்ணை வீட்டில் இருந்த பைக் கேரேஜைப் பார்த்து அதிர்ந்தே விட்டாராம். ஏனெனில் அந்த கேரேஜில் அத்தனை பைக்குகள் இருந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட பைக்குகள் தோனியிடம் இருக்கிறதாம். இதுவே குறைவான எண்ணிக்கை தான், இதற்கு மேலும் இருக்கக்கூடும்.


இந்த நிலையில், தோனி ராஞ்சி பகுதியில் YAMAHA R1-Z பைக்கில் ஜாலியாக ரைடு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web