செம வீடியோ.. முன்னாள் அதிபர் டிரம்புடன் ​கோல்ஃப் விளையாடும் தல தோனி!

 
MSD - Trump

அமெரிக்க சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முன்னாள் அதிபர் டிரம்புடன் கோல்ஃப் விளையாடிய வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அமெரிக்காவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அடுத்து சீன் ஐபிஎல் போட்டிக்காக தனது உடலையும், மனதையும் தயார்படுத்துவதில் தீவிரமாக இருந்த தோனி தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

MSD

இந்த அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோனியை ​கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார். அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் போட்டிப்போட தயாராகி வரும் டொனால்டு டிரம்ப் தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துக்கொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடிய நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடன் டொனால்டு டிரம்ப் தனது கோல்ஃப் விளையாட்டு உடையில் ஒரு படத்தை கிளிக் செய்து வெளியிடப்பட்டதில் தப்போது வைரலாகி உள்ளது.


இந்த புகைப்படத்தில் தோனியும் டிரம்பும் அருகருகே நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். தோனி நீண்ட தலைமுடியும், தாடியும் கொண்டு புதிய லுக்கில் உள்ளார். இந்த போட்டோ உடன் வீடியோவும் ஒன்ற வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படம் கொண்ட பதிவில் தல ஃபீவர் இன் USA என பதிவிடப்பட்டு உள்ளது.

From around the web