ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி... பள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத்.!

 
GT

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கத்தில் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் சிறப்பாக விளையாடிய சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 2 ரன்கள், பராக் 4 ரன்கள், படிக்கல் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

RR

அடுத்து களமிறங்கிய ஹெட்மையர் 7 ரன்கள் , ஜூரல் 9 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும் , நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 119 ரன்கள் இலக்குடன் குஜராத் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், விருத்திமான் சகாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் மிரட்டினார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். சகா பொறுப்புடன் விளையாடி 41 ரன்கள் எடுத்தார். 

GT

ராஜஸ்தான் அணிக்கு வெற்றிபெற சிறிய வாய்ப்பு கூட குஜராத் அணி வழங்கவில்லை. இறுதியில் குஜராத் அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. அத்துடன் அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியது.

From around the web