அப்படி போடு.. அப்படி போடு.. பாடலுக்கு டான்ஸ் ஆடிய விராட்.. வைரல் வீடியோ!

 
Virat Kholi

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது, விராட் கோலி ‘அப்படி போடு’ பாடலைக் கேட்டு குதூகலமாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

17வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இளம் வீரர் அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 48 ரன்கள் சேர்த்தார்.

CSK vs RCB

சென்னை அணி தரப்பில் நட்சத்திர பவுலர் முஷ்தஃபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்து வெற்றியடைந்தது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்களும், சிவம் துபே 28 பந்துகளில் 34 ரன்களும், ரஹானே 27 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் சேர்த்தனர். இந்த போட்டியில் ஆட்டநாயனகாக இளம் வீரர் முஷ்தாஃபிசுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அப்படி போடு..’ பாடல் ஒலிக்கப்பட்டது. இதைக் கேட்டு குதூகலமாக பெங்களூரு அணி வீரர் விராட் கோலி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


முன்னதாக தொடக்க நாளான நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வத்தனர்.

From around the web